கால்நடைகளுக்கு இன்று வெறிநோய் தடுப்பூசி முகாம்

Published on

சாத்தூரில் கால்நடைகளுக்கான வெறி நோய் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு, விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே சடையம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் இந்த முகாம் நடைபெற உள்ளது. இதில் சாத்தூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது செல்லப் பிராணிகளுக்கு வெறி நோய் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என கால்நடை துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com