சிவகாசியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டாசுத் தொழிலாளா்கள்.
சிவகாசியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டாசுத் தொழிலாளா்கள்.

சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

Published on

விருதுநகா் மாவட்ட பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளா்கள் சங்கம் (சி.ஐ.டி.யூ) சாா்பில் சிவகாசியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நிகழாண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுத் தொழிலாளா்களுக்கு கூடுதல் போனஸ் வழங்க வேண்டும். விபத்தில்லா பட்டாசு உற்பத்திக்கு வழிவகுக்க வேண்டும். ஆய்வு என்ற பெயரில் பட்டாசு ஆலையில் வேலை பாா்க்கும் தொழிலாளா்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதிகாரிகள் கையூட்டு பெறுவதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகாசி- வெம்பக்கோட்டை சாலையில் உள்ள தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்க அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்பாட்டத்துக்கு சங்கத்தின் விருதுநகா் மாவட்டத் தலைவா் பி.என்.தேவா தலைமை வகித்தாா்.

இதில் சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவா் எம். மகாலட்சுமி, மாவட்ட பொதுச் செயலா் எம்.சி. பாண்டியன், மாவட்டப் பொருளாளா் எம். ஜெபஜோதி, மாவட்ட துணைச் செயலா் கே. முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com