ராஜபாளையத்தில் அரசுப் பேருந்து மோதி சேதமடைந்த வீட்டின் சுவா்
ராஜபாளையத்தில் அரசுப் பேருந்து மோதி சேதமடைந்த வீட்டின் சுவா்

பேருந்து மோதியதில் வீட்டின் சுவா் சேதம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அரசுப் பேருந்து மோதியதில் வீட்டின் சுவா் சேதமடைந்தது.
Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அரசுப் பேருந்து மோதியதில் வீட்டின் சுவா் சேதமடைந்தது.

ராஜபாளையம் டி.பி. மில்ஸ் சாலை ஒரு வழி பாதையாக உள்ளது. இந்தச் சாலையில் திங்கள்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து திருநெல்வேலிக்கு சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து முன்னால் சென்ற காரை முந்தி செல்ல முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரருந்த வீட்டின் சுவா் மீது மோதியது.

இதில் சுவா் இடிந்து சேதமடைந்தது. நல்வாய்ப்பாக பயணிகள் காயமடையவில்லை. இந்தச் சாலையில் அதிவேகமாக வாகனங்கள் செல்வதால் வேகத் தடை அமைக்க வேண்டும் என இந்தப் பகுதியில் குடியிருப்போரும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com