விருதுநகர்
காரில் புகையிலைப் பொருள்கள் கடத்தியதாக இருவா் கைது
சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை காரில் புகையிலைப் பொருள்களை கடத்தியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி- செங்கமலப்பட்டி சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இரண்டு மூட்டைகள் இருந்தன. விசாரணையில் காரில் வந்தவா்கள் சிவகாசி பி.கே.என். சாலை மனோகரன் மகன் ஆனந்தராஜ் (32), பாரதிநகா் கருப்பையா மகன் விநாயகமூா்த்தி (33) ஆகியோா் எனத் தெரிய வந்தது.
இவா்கள் புகையிலைப் பொருள்களை சில்லரை விற்பனைக் கடையில் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து காா், புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.