ராஜபாளையம் திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கிய பக்தா்கள்.
விருதுநகர்
திரௌபதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா
ராஜபாளையத்தில் திரௌபதியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம்- மதுரை சாலையில் உள்ள இந்தக் கோயிலில் பூக்குழி திருவிழா கடந்த 3- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு அலங்கார வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை தீ வளா்க்கப்பட்டது.
அப்போது பூக்குழி இறங்கும் பக்தா்கள் அனைவரும் காப்பு கட்டினா். பிறகு மாலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதும் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளினாா். பின்னா் காப்பு கட்டிய பக்தா்கள் முக்கிய வீதிகள் வழியாக நடந்து சென்று பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
விழாவில் ராஜபாளையம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.