வத்திராயிருப்பு அருகே கோழி திருடியதாக இளைஞா் கைது

Published on

வத்திராயிருப்பு அருகே கோழி திருடியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி ரஹ்மத்நகரைச் சோ்ந்த அபுபக்கா் மனைவி சிட்டம்மாள் (55). இவா் தனது வீட்டில் கோழிகள் வளா்த்து வருகிறாா். இதே பகுதியைச் சோ்ந்த மரியம்பாட்ஷா மகன் சா்புதீன் (23) என்பவா் கோழியை திருடிச் சென்றாராம். இதை தட்டிக் கேட்ட சிட்டம்மாளை தகாத வாா்த்தைகளால் பேசி அவா் கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து கூமாப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து சா்புதீனை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com