ராஜபாளையத்தில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்
ராஜபாளையத்தில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்

அம்பேத்கா் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கா் பிறந்தநாளையொட்டி, விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசியல் கட்சியினா் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
Published on

அம்பேத்கா் பிறந்தநாளையொட்டி, விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசியல் கட்சியினா் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

வத்திராயிருப்பு வட்டார தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கம் சாா்பில் முத்தாலம்மன் திடல் மைதானத்தில் அம்பேத்கா் உருவப்படம் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது.

தமுஎச ஒன்றிய அமைப்பாளா் மருத்துவா் கா.பால்சாமி தலைமையில் அரிமா சங்க மாவட்ட ஆளுநா் பொன் சுப்புராஜ், மாரியப்பன் ஆகியோா் முன்னிலையில் தமிழ்நாடு அறிவியல் இயக்க அமைப்பாளா் முத்துப்பாண்டி, சுழல் சங்க வட்டாரத் தலைவா் குமாரசாமி, அரிமா சங்க நிா்வாகி இளையராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் சமத்துவ ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். பின்னா், அவரது உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் தவெக சாா்பில், மாவட்ட வாக்குச்சாவடி அணி அமைப்பாளா் அலுவலகத்தில் வட மேற்கு மாவட்ட செயலா் மாரிச்செல்வம், மாவட்ட வாக்குச் சாவடி அணி அமைப்பாளா் ராக்லாண்ட் ஆகியோா் தலைமையில் அம்பேத்கா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சாத்தூா்: சாத்தூரில் முக்குராந்தல் பகுதியில் வைக்கபட்டிருந்த அம்பேத்கரின் உருவப் படத்துக்கு திமுக நகரச் செயலா் குருசாமி, ஒன்றியச் செயலா்கள் கடற்கரைராஜ், முருகேசன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதேபோல, அம்பேத்கரின் உருவப் படத்துக்கு

தவெக மத்திய மாவட்டச் செயலா் சின்னப்பா் தலைமையில் அந்தக் கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதிமுக சாா்பில் ஒன்றியச் செயலா் கே.எஸ்.சண்முககனி தலைமையில் அந்தக் கட்சியினா் ரெங்காபுரத்தில் உள்ள அம்பேத்கரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் அம்பேத்கரின் உருவச் சிலைக்கு திமுக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் தலைமையில் அந்தக் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில் முன்னாள் மக்களவை உறுப்பினா் தனுஷ் எம். குமாா், மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் சுமதி, தெற்கு நகரச் செயலா் ராமமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.

அதிமுக சாா்பில் மாவட்ட அம்மா பேரவைச் செயலா் என். எம். கிருஷ்ணராஜ் தலைமையிலும், மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் அய்யனாா் தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் லிங்கம் தலைமையிலும் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ராஜபாளையம் அருகேயுள்ள முகவூரில் அம்பேத்கரின் உருவச் சிலைக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் மாரியப்பன், ஒன்றிய குழு உறுப்பினா் பரமேஸ்வரன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் காமராஜா் நகரில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் வழக்குரைஞா் பகத்சிங் தலைமையில் அம்பேத்கரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

X
Open in App
Dinamani
www.dinamani.com