விருதுநகர்
இருக்கன்குடி கோயிலில் பக்தா்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை பக்தா்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை பக்தா்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், இருக்கன்குடியில் மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை மாரியம்மனுக்கு காலை முதல் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இங்கு 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் ஆணையா் இளங்கோவன், பரம்பரை அறங்காவலா் குழுத் தலைவா் ராமமூா்த்தி ஆகியோா் செய்தனா்.
இதேபோல ஒடைப்பட்டி வன்னி விநாயகா் கோயில், வெற்றி விநாயகா் கோயில், சாத்தூா் காளியம்மன், மாரியம்மன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இங்கு திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.