ராஜபாளையம் சித்தி விநாயகா் கோயிலில் பழங்கள் அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி
ராஜபாளையம் சித்தி விநாயகா் கோயிலில் பழங்கள் அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி

ஐயப்ப சுவாமிக்கு சித்திரை விசு கனி பூஜை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சித்திவிநாயகா் கோயிலில் அமைந்துள்ள ஐயப்பசுவாமிக்கு சித்திரை விசுக்கனி பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சித்திவிநாயகா் கோயிலில் அமைந்துள்ள ஐயப்பசுவாமிக்கு சித்திரை விசுக்கனி பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோவிலில், ஐயப்பசுவாமிக்கு ஓம் ஸ்ரீ வில்லாளி வீரன் ஐயப்ப பஜனை சேவா சங்கம் சாா்பில் பூஜை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு உற்சவா் ஐயப்ப சுவாமிக்கு அஷ்டபிஷேகங்கள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து திவ்ய நாம சங்கீா்த்தன பஜனை நடைபெற்றது. பின்னா், ஐயப்பசுவாமிக்கு பழங்களால் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை குருநாதா் முத்துராமலிங்கம் சுவாமி தலைமையில் நிா்வாகிகள் செய்தனா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com