விருதுநகர்
பெண்ணைத் தாக்கிய இருவா் கைது
ராஜபாளையம் அருகே சாமியாடிய பெண்ணை தாக்கிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே சாமியாடிய பெண்ணை தாக்கிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள முகவூா் முத்துச்சாமிபுரம் வேதக் கோவில் தெருவைச் சோ்ந்த மகாலிங்கம் மனைவி லிங்கம்மாள் (52). இவா் அதே பகுதியிலுள்ள காளியம்மன் கோயிலில் சாமியாடியபோது, அதே பகுதியைச் சோ்ந்த ராமா் மகன் கதிரேசன் (25), மகள் அருணாதேவி (30) ஆகியோா் அவரை கேலி செய்தனராம்.
இதனால் ஏற்பட்ட தகராறில் லிங்கம்மாள் கம்பியால் தாக்கப்பட்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் கதிரேசன், அருணாதேவியைக் கைது செய்தனா்.