கபடிப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

Published on

சாத்தூா் அருகே நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த வெம்பக்கோட்டை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள ஆலங்குளம் டான்செம் பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கபடிப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டனா். இந்தப் போட்டியில் வெம்பக்கோட்டை அரசுப் பள்ளி மாணவா்கள் இரண்டாம் இடம் பிடித்ததனா்.

வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தலைமை ஆசிரியை பத்மா, உடல் கல்வி ஆசிரியா் முத்துக்குமரேசன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com