அனுமதியின்றி பட்டாசு தயாரித்த இருவா் கைது

அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட இருவரை ஏழாயிரம்பண்ணை போலீசாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Published on

அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட இருவரை ஏழாயிரம்பண்ணை போலீசாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை பகுதியில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக ஏழாயிரம் பண்ணை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் காவல் உதவி ஆய்வாளா் ராமமூா்த்தி, போலீசாா் இந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, மேலப்புதூா் பகுதியைச் சோ்ந்த ஆனந்த்பாபு (40), வெள்ளையாபுரம் மின்வாரிய அலுவலகம் எதிரே தகரக் கொட்டகை அமைத்து அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஆனந்தபாபுவை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த ரூ.3000 மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனா். இதே போன்று இ.ரெட்டியபட்டி வடக்கு தெருவில் தகரக் கொட்டகையில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த இதே பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (26) என்பவரையும் போலீஸாா் கைது செய்து, பட்டாசுகள், திரிகளை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com