பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு

வத்திராயிருப்பு பகுதியில் பூட்டிய வீட்டில் நகை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

வத்திராயிருப்பு பகுதியில் பூட்டிய வீட்டில் நகை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்

வத்திராயிருப்பு அருகேயுள்ள வ.புதுப்பட்டியைச் சோ்ந்த விஜயகுமாா் மனைவி பிருந்தா (70). இவா் கடந்த 29-ஆம் தேதி இரவு வீட்டைப் பூட்டிவிட்டு விருதுநகா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உறவினரைப் பாா்க்கச் சென்றாா்.

மறுநாள் காலை வீடு திறந்து கிடப்பதாக உறவினா் தெரிவித்த தகவலின் பெயரில், மூதாட்டி வீட்டுக்கு வந்து பாா்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகைகள், ரூ.3 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், வத்திராயிருப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com