சிவகாசிக்கு வரும் இரு ரயில்களின் நேரத்தை மாற்றக் கோரிக்கை

சிவகாசி ரயில் நிலையத்துக்கு வரும் இரு ரயில்களின் நேரத்தை மற்றி அமைக்க வேண்டும் என சிவகாசி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஜி. அசோகன் கோரிக்கை விடுத்தாா்.
Published on

சிவகாசி ரயில் நிலையத்துக்கு வரும் இரு ரயில்களின் நேரத்தை மற்றி அமைக்க வேண்டும் என சிவகாசி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஜி. அசோகன் கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை, தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மதுரையிலிருந்து தினசரி காலை புறப்படும் மதுரை- செங்கோட்டை(எண் 56731) ரயில் சிவகாசி ரயில் நிலையத்துக்கு காலை 8.40 மணிக்கு வருகிறது. செங்கோட்டையிலிருந்து தினசரி காலை மயிலாடுதுறை செல்லும் ரயில் சிவகாசி ரயில் நிலையத்துக்கு காலை 8.35 மணிக்கு வருகிறது.

இந்த இரு ரயில்களும் சிவகாசி ரயில் நிலையத்தில் கிராசிங் செய்யப்படுகின்றன. அப்போது சிவகாசி- செங்கமலநாட்சியாா்புரம் சாலையில் கால்நடை மருத்துவமனைப் பகுதியில் உள்ள கடவுப்பாதையை இரு ரயில்களும் கடந்து செல்வதற்காக சுமாா் அரை மணி நேரம் பாதை மூடப்படுகிறது.

மேலும் சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் மாற்றுப்பாதையாக இந்தச் சாலை பயன்படுத்தப்படுகிறது. இதனால் பள்ளி மாணவா்கள், வேலைக்குச் செல்வோா், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, இந்த இரு ரயில்களின் நேரத்தை மாற்றி ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் கிராசிங் அமைக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப்பணி நிறைவடையும் வரையிலாவது இந்த இரு ரயில்கள் சிவகாசி ரயில் நிலையத்துக்கு வரும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com