விருதுநகர்
லாரி மோதி வழக்குரைஞா் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் லாரி மோதியதில் வழக்குரைஞா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் லாரி மோதியதில் வழக்குரைஞா் உயிரிழந்தாா்.
ராஜபாளையம் தென்றல் நகா் பச்சை குடியிருப்பைச் சோ்ந்த அா்ச்சுனன் மகன் முத்துமணி (44). இவா் ராஜபாளையம் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு உறவினா் ஒருவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் இறக்கிவிட்டுவிட்டு இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தாா்.
தென்காசி சாலையில் முன்னே சென்ற லாரியை முந்த முயன்ற போது அவா் சாலையோரம் கிடந்த மணலில் சிக்கி கீழே விழுந்தாா். அப்போது லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா், தா்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மூா்த்தியை (60) கைது செய்து விசாரிக்கின்றனா்.