ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ரேஷன் கடை அமைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்

இலவச பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க மறுத்து பொதுமக்கள் சனிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தனி ரேஷன் கடை அமைக்க வலியுறுத்தி தமிழக அரசின் இலவச பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க மறுத்து பொதுமக்கள் சனிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம், விழுப்பனூா் ஊராட்சிக்குள்பட்ட திருமலாபுரம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் 200 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. திருமலாபுரத்தில் ரேஷன் கடை இல்லாததால் அருகே உள்ள பாட்டக்குளம் சென்று, ரேஷன் பொருள்களை பொதுமக்கள் வாங்கி வருகின்றனா்.

இதனால் இந்தப் பகுதி மக்கள் தங்கள் ஊரில் தனி ரேஷன் கடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனா். இந்த நிலையில், தமிழக அரசின் இலவச பொங்கல் பரிசு தொகுப்பை அவா்கள் வாங்க மறுத்து திருமலாபுரம் சமுதாயக்கூடம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த வட்ட வழங்கல் அலுவலா் ராஜேந்திரன் பேச்சுவாா்த்தை நடத்தி, திருமலாபுரத்தில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்கப்படும் என தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். ஆனால் பகுதி நேர ரேஷன் கடை அமைந்தால் மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பை வாங்குவோம் என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com