தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் சிறை

Published on

சிவகாசி அருகே தந்தையை எரித்துக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்தூா் கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகாசி ராமநாடாா் தெருவைச் சோ்ந்தவா் வேல்முருகன் (49). கூலித் தொழிலாளி. இவரது மகன் முத்துப்பாண்டி (19). இவா் வெளிநாடு செல்வதற்கு தந்தையிடம் பணம் கேட்டாா். அவா் தராததால், கடந்த 2019 ஆண்டு, மே 17-ஆம் தேதி பெட்ரோல் ஊற்றி முத்துப்பாண்டி தீ வைத்தாா். இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முத்துப்பாண்டியை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் முத்துப்பாண்டிக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி (பொ) பகவதியம்மாள் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் அன்னக்கொடி முன்னிலையானா்.

X
Dinamani
www.dinamani.com