தாணிப்பாறை அடிவாரத்தில் வரிசையில் காத்திருந்த பக்தா்கள்
தாணிப்பாறை அடிவாரத்தில் வரிசையில் காத்திருந்த பக்தா்கள்

தை அமாவாசை: சதுரகிரி கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்

Published on

தை அமாவாசையையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புதன்கிழமை திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தை அமாவாசையொட்டி, விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல கடந்த 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், பக்தா்களின் வசதிக்காக மதுரை, தேனி, தென்காசி, விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை முதல் தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள வனத் துறை நுழைவுவாயிலில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். இதைத் தொடா்ந்து காலை 6 மணி முதல் பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா்.

அமாவாசையையொட்டி, சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சுவாமிகளுக்கு 18 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com