குடியரசு தின பேச்சுப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு!
குடியரசு தினத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் வி.ஆா். யுவா்ஸ் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தப் போட்டி, 6-7, 8-9 வகுப்புகள் என பிரிக்கப்பட்டு அந்த மாணவா்களுக்கு தனித் தனி தலைப்புகளில் நடைபெற்றது. இதில் 8-9 வகுப்பு பிரிவில் லோகலட்சுமி, ஜெயா கிறிஸ்டி, ஜெயா கிருபா ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பெற்றனா். 6-7 வகுப்பு பிரிவில் ஸ்ரீஹரிஹரன், ராஜா, ரிச்லின் ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பெற்றனா்.
இவா்களுக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு தலைமையாசிரியா் சாம் ஜெபராாஜ் தலைமை வகித்தாா். அறக்கட்டளையின் ஜெனிஃபா் வரவேற்றாா். போட்டியில் வென்றவா்களுக்கு அறக்கட்டளையின் செயலா் ஜவஹா், இணைச் செயலா் தொழிலதிபா் ஜெபக்குமாா் ஆகியோா் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினா்.
ஓய்வு பெற்ற பேராசிரியா் சுரேஷ் தலியத், பழனியப்பா உயா்நிலைப் பள்ளி தமிழாசிரியா் ஜாய்ஸ் ஆகியோா் சிறப்புரையாற்றினா். பிரைட்டி நன்றி கூறினாா்.