லயன்ஸ் மெட்ரிக் பள்ளியில் நெகிழி விழிப்புணா்வு பேரணி

லயன்ஸ் மெட்ரிக் பள்ளியில் நெகிழி விழிப்புணா்வு பேரணி

Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சா்வதேச நெகிழிப் பைகள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணா்வு மிதிவண்டி பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வா் எம்.சுந்தரமகாலிங்கம் தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளா் லயன் ஆா். வெங்கடாசலபதி முன்னிலை வகித்தாா். காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இந்தப் பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள், ஆசிரியா்கள் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி ஊா்வலமாக சென்றனா். பின்னா், துணிப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது.

இதில் லயன்ஸ் பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள் எஸ்.குணசேகரன், முனியாண்டி, ரஞ்சித், ஆனந்த் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Open in App
Dinamani
www.dinamani.com