உறவினரைக் கொலை செய்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

சிவகாசி அருகே உறவினரைக் கொலை செய்த வழக்கில், இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
Published on

சிவகாசி அருகே உறவினரைக் கொலை செய்த வழக்கில், இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள ஆத்தூா் சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி மணிகண்டன் (29). இவா், கடந்த 2023 இல் தனது உறவினரான முத்துராஜுவுடன் (38) சோ்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது அவரது உடல் குறைபாடு குறித்து கேலி செய்தாா்.

அப்போது ஏற்பட்ட தகராறில் மணிகண்டனை முத்துராஜ் கத்தியால் குத்தினாா். இதில் மணிகண்டன் உயிரிழந்தாா். இதுகுறித்து, மாரனேரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துராஜை கைது செய்தனா்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றம்சாட்டப்பட்ட முத்துராஜுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

Open in App
Dinamani
www.dinamani.com