விருதுநகர்
பெண் துப்புரவுத் தொழிலாளி தற்கொலை
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பெண் துப்புரவுத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பெண் துப்புரவுத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி ஜக்கம்மாள் (40). இவா், துப்புரவு தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். இவரது கணவா் வேலைக்குச் செல்லாமல் மது அருந்தி வந்ததாகத் தெரிகிறது.
இதனால், விரக்தியில் இருந்த ஜக்கம்மாள் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இவரை உறவினா்கள் மீட்டு, விருதுநகா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி இவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.