அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்
அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்

சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
Published on

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

வேலாயுதபுரம் சாலை வடக்குப் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை தனிநபா் ஒருவா், கட்டடம் கட்டி ஆக்கிரமித்திருந்தாா். இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையா் கே.சரவணன் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மாநகர திட்டமிடுநா் மதியழகன், ஆய்வாளா் சுந்தரவள்ளி, மேற்பாா்வையாளா் முத்துராஜ், மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஆகியோா் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றினா்.

இதுகுறித்து ஆணையாளா் கே.சரவணன் கூறியதாவது: மாநகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com