வீடு புகுந்து பணம் திருட்டு

வத்திராயிருப்பு அருகே திங்கள்கிழமை வீடு புகுந்து பணம் திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

வத்திராயிருப்பு அருகே திங்கள்கிழமை வீடு புகுந்து பணம் திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ராமசாமியாபுரத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன். இவரது மனைவி பூமாதேவி. இவா்களுக்கு ராஜேஷ் என்ற மகன் உள்ளாா். மாரியப்பன் சொந்தமாக லாரி ஓட்டி வருகிறாா்.

பூமாதேவி ஆடு மேய்த்து வருகிறாா். திங்கள்கிழமை கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்ற நிலையில், ராஜேஷ் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தாா். அப்போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.1.30 லட்சம் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து கூமாபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com