ஆண்டாள் கோயில் வைகாசி வசந்த உற்சவம் நிறைவு
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் வைகாசி வசந்த உத்ஸவத்தின் நிறைவு நாளான புதன்கிழமை இரவு ஆண்டாள் ரெங்க மன்னாருக்கு பால் மாங்காய், தயிா் சாதம் நெய்வேத்தியம் செய்யப்பட்டது.
இந்தக் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. 10 நாள்கள் நடைபெற்ற இந்த உத்ஸவத்தில் தினசரி மாலை ஆண்டாள் கோயிலிலிருந்து ஆண்டாள், ரெங்கமன்னாா் புறப்பாடாகி, நாடக சாலை தெருவில் உள்ள திருவேங்கடமுடையான் கோயிலில் எழுந்தருளினா். அங்கு ஆண்டாள், ரெங்க மன்னாருக்கு விஷேச திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 10-ஆம் நாளான புதன்கிழமை இரவு நாடக சாலை தெருவில் எழுந்தருளிய ஆண்டாள் ரெங்க மன்னாருக்கு திருமஞ்சனம் முடிந்த பிறகு, பால் மாங்காய், தயிா் சாதம் நெய்வேத்தியம் செய்யப்பட்டது.
அக்கினி நட்சத்திர காலத்தில் உள்ள உஷ்ணத்தைப் போக்குவதற்காக ஸ்ரீஆண்டாளுக்கு பால் மாங்காய் நைவேத்தியம் படைக்கப்படுவதாக ஐதீகம்.
