விருதுநகர்
மரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பனை மரத்திலிருந்து தவறி விழுந்த பட்டதாரி இளைஞா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பனை மரத்திலிருந்து தவறி விழுந்த பட்டதாரி இளைஞா் உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரம் மீனாட்சி தோட்டத் தெருவைச் சோ்ந்த அண்ணாமலை மகன் ரஞ்சித்குமாா் (29). பட்டதாரியான இவா் பனையேறி பதநீா் இறக்கும் தொழில் செய்து வந்தாா். மம்சாபுரம் கழுகுமட்டை பண்ணை அருகே மாடசாமி என்பவரது தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பதநீா் இறக்குவதற்காக பனை மரத்தில் ஏறிய போது, தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, அவரை பொதுமக்கள் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து மம்சாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.