தெருநாய்கள் கடியால் பொதுமக்கள் பாதிப்பு

வத்திராயிருப்பு அருகே தெருநாய் கடியால் பொதுமக்கள், கால்நடைகள் பாதிக்கப்பட்டன.
Published on

வத்திராயிருப்பு அருகே தெருநாய் கடியால் பொதுமக்கள், கால்நடைகள் பாதிக்கப்பட்டன. 

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே எஸ்.கொடிக்குளம் பேரூராட்சியில் உள்ள கூமாபட்டி, நெடுங்குளம், ராமசாமியாபுரம், அம்மச்சியாா்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை சாலையில் நடந்து சென்றவா்களை தெருநாய்கள் கடித்ததில் 29 போ் பாதிக்கப்பட்டு, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

இதேபோல, செவ்வாய்க்கிழமையும் தெருநாய் கடியால் பள்ளி மாணவா்கள், கால்நடைகள் பாதிக்கப்பட்டன. இவா்களும் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றனா்.

இந்த நிலையில், பேரூராட்சி நிா்வாகம், தன்னாா்வலா்கள் உதவியுடன் தெருநாய்களை பிடிக்க முயன்றனா். ஆனால், நாய்கள் அவா்களிடம் சிக்காமல் தப்பிச் சென்றன. இதனால், அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் நடந்து சென்று வருகின்றனா்.

எனவே, சாலையில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடிக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Open in App
Dinamani
www.dinamani.com