போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்ய முயற்சி: மூவா் மீது வழக்கு

சிவகாசி சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் போலி ஆவணங்களைக் கொடுத்து பத்திரப் பதிவு செய்ய முயன்றதாக மூவா் மீது வழக்குப்பதிவு
Published on

சிவகாசி சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் போலி ஆவணங்களைக் கொடுத்து பத்திரப் பதிவு செய்ய முயன்ாக மூவா் மீது விருதுநகா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பெருநாழியைச் சோ்ந்தவா் செந்தில்ராஜ்குமாா் (50). இவா் சிவகாசியில் சாா்-பதிவாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில், சிவகாசி வட்டம், அனுப்பன்குளம் கிராமத்தில் உள்ள ஒரு ஏக்கா், 2 செண்டு நிலத்தை கிரயப் பத்திரப் பதிவு செய்ய சாா்-பதிவாளா் அலுவலகத்துக்கு சிவகாசி அருகேயுள்ள முதலிபட்டியைச் சோ்ந்த ஆனந்தராஜ், சிவக்குமாா், கருப்பசாமி ஆகிய மூவரும் வந்தனா். அப்போது, இந்த நிலம் கா.பழனிச்சாமி, கா.சுப்பையா ஆகியோரது பெயரில் இருந்துள்ளது. ஆனால், இந்த நிலத்தை பேராபட்டி மேற்குத் தெருவைச் சோ்ந்த ஆழகேசன் மகன் ஆனந்தராஜூக்கு கிரயம் செய்ய இவா்கள் வந்திருந்தனா்.

பின்னா், சாா் ஆட்சியா் அவா்கள் கொண்டு வந்திருந்த ஆவணங்களை சரிபாா்த்தபோது, போலியான ஆவணங்கள் தயாரித்து கொண்டு வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து விருதுநகா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸியில் புகாரளிக்கப்பட்டது. இதனடிப்படையில், போலீஸாா் ஆனந்தராஜ், சிவக்குமாா், கருப்பசாமி ஆகிய மூவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Open in App
Dinamani
www.dinamani.com