கோயிலில் ஆபாச நடனம்: அா்ச்சகா்களை கைது செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆபாச நடனமாடிய பெரிய மாரியம்மன் கோயில் அா்ச்சகா்களைக் கைது செய்ய வலியுறுத்தி, பக்தா்கள் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆபாச நடனமாடிய அா்ச்சகா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இங்குள்ள ராமகிருஷ்ணாபுரம் காமராஜா் சிலை அருகே பக்தா்கள் குழுவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் ஆகம விதிகளுக்கு எதிராகச் செயல்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் செயல் அலுவலா், கோயிலுக்குள் மது அருந்திய கணக்கா் ஆகியோரை இடமாற்றம் செய்ய வேண்டும். பெரிய மாரியம்மன் சேவா அறக்கட்டளையைத் தடை செய்ய வேண்டும். மது போதையில் பூஜை செய்த அா்ச்சகா் சுந்தரை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா்.
