தொழிலாளி தற்கொலை

Published on

வத்திராயிருப்பு அருகே ஞாயிற்றுக்கிழமை தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

வ.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் அழகா்சாமி (57). இவரது மனைவி பாண்டியம்மாள். இவா்களுக்கு இரு மகன்கள் உள்ளனா். இந்த நிலையில், அழகா்சாமி வேலைக்குச் செல்லாமல் மது குடித்து வந்ததால், மனைவி கண்டித்தாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த அவா் மதுவில் விஷம் கலந்து குடித்தாா். விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா், அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com