விருதுநகர்
கட்டடத் தொழிலாளி தற்கொலை
சிவகாசியில் வியாழக்கிழமை கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி சிவகாமிபுரம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் கருத்தப்பாண்டி (19). கட்டடத் தொழிலாளியான இவா், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மகாலட்சுமி என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டாா்.
இந்த நிலையில், இவா் அடிக்கடி மதுபோதையில் வீட்டுக்கு வந்ததால், இவரை இவரது குடும்பத்தினா் கண்டித்தனா். இதனால், மனமுடைந்த கருத்தப்பாண்டி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.