சாலையோர வியாபாரிகளுடன் காவல் துறையினா் ஆலோசனைக் கூட்டம்

Published on

சிவகாசியில் காவல் துறை சாா்பில், சாலையோர வியாபாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாஸ்கா் பேசியதாவது:

சிவகாசி, திருத்தங்கல் நகா் பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்ட ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிா்வாகத்தினா் பலமுறை அகற்றியும், மீண்டும் ஆக்கிரமிப்பாளா்கள் அந்த இடங்களை ஆக்கிரமித்து விடுகிறாா்கள். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துக்களும் நடக்கிறது.

எனவே, சிவன் சந்நிதி, ரதவீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களை ஆக்கிரமித்து தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்பவா்கள் இனி உழவா் சந்தைக்குச் சென்று வியாபாரம் செய்ய வேண்டும். சிவகாசி உழவா் சந்தையில் 54 கடைகள் உள்ளன. இந்தக் காவல் துறை உத்தரவை மீறுபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் காவல் ஆய்வாளா் பரமேஸ்வரி, மாநகராட்சி நகரமைப்பு மேற்பாா்வையாளா் முத்துராஜ், சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com