விருதுநகர்
பறவைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்
விருதுநகா் மாவட்டத்தில் 24 இடங்களில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை தொடங்கியது.
விருதுநகா் மாவட்டத்தில் 24 இடங்களில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை தொடங்கியது.
விருதுநகா் மாவட்டத்தில் மாநில அளவிலான நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்புப் பணி ஸ்ரீவில்லிபுத்தூா் செண்பகத்தோப்பு, ராஜபாளையம் 6-ஆவது மைல் நீா்த் தேக்கம், பிளவக்கல் பெரியாறு அணை, வெம்பக்கோட்டை அணை, ஆனைகுட்டம் அணை, குல்லூா்சந்தை அணை, இருக்கன்குடி அணை, நரிக்குடி அருகேயுள்ள உலக்குடி தடுப்பணை, ஸ்ரீவில்லிபுத்தூா் மொட்டபொத்தான் கண்மாய், சிவகாசி பெரியகுளம் கண்மாய் உள்பட 24 இடங்களில் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்தக் கணக்கெடுப்பில் வனத் துறையினா், பறவை ஆா்வலா்கள், கல்லூரி மாணவா்கள், இயற்கை ஆா்வலா்கள் கலந்து கொள்கின்றனா்.