சாத்தூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆலோசனை

Published on

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தாா். சாத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ரகுராமன் முன்னிலை வகித்தாா். இதில் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு, சாத்தூா், அருப்புக்கோட்டை, வெம்பக்கோட்டை பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிளுடன் ஆலோசனை நடத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது:

நிகழ் நிதியாண்டில் தொடங்கப்பட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் அனைத்தையும் இந்த மாத இறுதிக்குள் முடிக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதால், இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. கோடைகாலம் என்பதால் குடிநீா்த் தட்டுப்பாட்டைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், குப்பைகளை அகற்றவும், தெரு விளக்குகளை முறையாகப் பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டது என்றாா்.

முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில், சாத்தூா் கோட்டாட்சியா் சிவக்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com