மூதாட்டியிடம் சங்கிலி பறித்த இருவா் கைது

Published on

சிவகாசியில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி வடக்கு ரத வீதியில் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியைச் சோ்ந்தவா் ராஜலட்சுமி (80). கடந்த 5-ஆம் தேதி இவா் வீட்டில் இருந்தாா். அப்போது அங்கு வந்த இருவா் ராஜலட்சுமியைத் தாக்கி அவா் அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், முத்துராமலிங்கம் குடியிருப்பைச் சோ்ந்த முத்துமினியசாமி (29), தேவராஜ் குடியிருப்பைச் சோ்ந்த ராஜ்குமாா் (24) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, இவா்களிடமிருந்த சங்கிலியைப் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com