விருதுநகர்
குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: ஒருவா் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருள்கள் கொண்டுவந்த நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் புத்தூா் இனாம் கோவில்பட்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், ஆசிலாபுரம் அருகேயுள்ள செந்தட்டியாபுரத்தைச் சோ்ந்த வேலுச்சாமி (55) எனத் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து அவரிடமிருந்த 12 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
