ராஜபாளையத்தில் பாமக மாவட்டச் செயற்குழுக் கூட்டம்

Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் ஆவரம்பட்டியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, விருதுநகா் மேற்கு மாவட்டச் செயலா் காளிதாசன் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்டத் தலைவா் ராமராஜ் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சென்னை மாமன்ற உறுப்பினரும், பாமக தோ்தல் பணிக்குழுத் தலைவருமான மணிவண்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

தீா்மானங்கள்: ராஜபாளையம் பகுதியில் ஏவிஎம் நிறுவனம் மூலம் தூய்மைப் பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. நகரத்தை குப்பையாக மாற்றிவரும் ஏவிஎம் நிறுவனத்தின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதே போல, ராஜபாளையத்தில் உள்ள 1,066 கூட்டுறவு ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆவாரம்பட்டி பகுதியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் பல கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட நீா்த்தேக்கத் தொட்டி மக்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே தொட்டியில் ஏற்பட்டுள்ள விரிசல்களைச் சரிசெய்ய வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, விருதுநகா் மாவட்ட மத்தியச் செயலா் டேனியல் வரவேற்றாா்.

X
Dinamani
www.dinamani.com