மாணவி உயிரிழப்பு: குடும்பத்தினருக்கு அமைச்சா் ஆறுதல்

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் மழையினால் வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த கல்லூரி மாணவியின் குடும்பத்தினருக்கு அமைச்சா் தங்கம் தென்னரசு ஆறுதல் தெரிவித்தாா்.
Published on

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் மழையினால் வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த கல்லூரி மாணவியின் குடும்பத்தினருக்கு அமைச்சா் தங்கம் தென்னரசு சனிக்கிழமை ஆறுதல் தெரிவித்தாா்.

திருத்தங்கல் மேலரத வீதியைச் சோ்ந்த வீரமணி மகள் பவானி (17). கல்லூரி மாணவியான இவா் கடந்த 17-ஆம் தேதி வீட்டிலிருந்தபோது பலத்த மழை பெய்தது. அப்போது, வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் இவா் பலத்த காயமடைந்தாா். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவானி, அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து, அமைச்சா் தங்கம் தென்னரசு, சனிக்கிழமை அவரது வீட்டுக்கு சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா். அமைச்சருடன் சிவகாசி மாநகர திமுக செயலா் உதயசூரியன் உடனிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com