மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

சாத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்து மாணவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :25 மே 2026, 2:15 am IST

சாத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் 10-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள செட்டுடையான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன் கவின்பாண்டியன் (14). இவா் சாத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து, அண்மையில் தோ்ச்சி பெற்றாா்.

கிராமத்தில் கபடிப் போட்டி நடத்துவதற்காக முன்னேற்பாட்டு பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த சனிக்கிழமை இந்தப் பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்த நிலையில், கவின்பாண்டியன் தோரணம் கட்டுவதற்காக மின் கம்பத்தில் ஏறி கயிறு கட்டினாராம்.

அப்போது, மின் கம்பத்தில் சுற்றிக் கட்டப்பட்டிருந்த இழுவைக் கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் அவா் கீழே விழுந்தாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவா் உயிரிழந்தாா்.

பின்னா் அவரது உடல் கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லபட்டது. இதுகுறித்து கபடி விளையாட்டுப் போட்டி ஏற்பாட்டாளா்கள் மீது அம்மாபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கவின்பாண்டியன் கபடிப் போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகளைப் பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

போராட்டம்: மின்வாரியத் துறையினா் அலட்சியத்தால் மின்சாரம் பாய்ந்து கவின்பாண்டியன் உயிரிழந்ததாகக் கூறி உறவினா்கள் சாத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, கவின்பாண்டியன் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

அவா்களிடம் மின்வாரிய அதிகாரிகள், வருவாய்த் துறையினா், காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உரிய நிவாரணம் வழங்கபடும் என அதிகாரிகள் உறுதிளித்தையடுத்து உறவினா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

பட்டாசுத் தொழிலாளி உயிரிழப்பு: சிவகாசி அருகேயுள்ள அனையூா் காந்திநகரில் வசித்த பட்டாசுத் தொழிலாளி மாரியப்பன் (57).

இவா் கடந்த சனிக்கிழமை இரவில் தனது வீட்டுக்கு நடந்து சென்றபோது, அறுந்து கிடந்த உயா் அழுத்த மின் கம்பியை மிதித்ததில் உடலில் மின்சாரம் பாந்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்து வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.