

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
தனது உழைப்பால் வாழ்வில வெற்றிக் கனியை ருசிக்கும் கன்னி ராசியினரே இந்த மாதம் நீங்கள் முயற்சி செய்யும் காரியங்கள் வெற்றியை தரும். பணவரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும் அதற்கு ஏற்றார்போல் இருக்கும். மற்றவர்களது உதவி கிடைக்கும். சாதூர்யமாக பேசி எதிலும் வெற்றி காண்பீர்கள். அனுபவப் பூர்வமான அறிவுத் திறன் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.
தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீர்கள். பங்கு மார்க்கெட் லாபம் ஓரளவு கூடும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வந்து சேரும். உங்களின் ஆலோசனைகள் மேலிடத்தால் அங்கீகரிக்கப்படும்.
குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். சிலர் அதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்யம் மேம்படும்.
பெண்களுக்கு சாதூர்யமாக பேசி எல்லா காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். அவர்களால் உங்களின் செல்வாக்கு தொண்டர்களிடம் உயர்ந்து காணப்படும்.
கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள்.
மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். சகமாணவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.
உத்திரம்:
இந்த மாதம் மனதடுமாற்றம் உண்டாகலாம். செலவு கூடும். நீண்ட நாட்களாக சந்தாணபாக்கியம் இல்லாதவர்களுக்கு தெய்வ அனுகூலத்தில் குழந்தைகள் பிறக்கும். வாழ்க்கைத்துணை அன்புடன் இருப்பர். பிறமொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். நீங்கள் பறிகொடுத்த பொருட்கள் மீண்டும் திரும்ப உங்களிடமே வந்து சேரும்.
ஹஸ்தம்:
இந்த மாதம் தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ள தகுந்த சூழ்நிலை வந்து சேரும். நீங்கள் இழந்த பதவி, நற்பெயர் மீண்டும் கிடைக்கும். எந்த முடிவையும் அவசரப்படாமல் நிதானமாக எடுக்க வேண்டும். சில வேண்டாத பிரச்சனைகள் உங்களைத் தேடி வரலாம்.
சித்திரை:
இந்த மாதம் நல்ல முன்னேற்றம் காணலாம். நீங்கள் இதுவரை பட்ட கஷ்டங்கள் விலகி நன்மையே நடக்கும். வீண் கவலைகளை விடுத்து உங்கள் கடமைகளை சரியாகச் செய்யுங்கள். நீங்கள் முயற்சி எடுத்து செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். நல்ல காலமாக இது அமையும்.
பரிகாரம்: துளிஸியை ஐயப்பனுக்கு அர்ப்பணித்து வணங்க கடன் சுமை குறையும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.