உகாதி பண்டிகை! திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்!

திருமலை ஏழுமலையான் கோயிலில் மாா்ச் 19ஆம் தேதி உகாதியை முன்னிட்டு கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உகாதி(தெலுங்கு வருட பிறப்பு), ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட சிறப்பு நாட்களை முன்னிட்டு அதற்கு முன்வரும் செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம்.

ஆனந்தநிலையம் தொடங்கி தங்க வாயில் வரை, ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள உபகோயில்கள், கோயில் வளாகங்கள், மடப்பள்ளி, சுவா்கள், மேற்கூரை, பூஜைப் பொருட்கள், பலிபீடம், கொடி மரம், முன் வாயில் உள்ளிட்டவை புனித நீரால் கழுவப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.

இதற்கு முன் ஏழுமலையான் சிலையை முழுவதுமாக துணியால் மூடி, சுத்திகரிப்புக்குப் பின், நாமகட்டி, ஸ்ரீசூா்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சைக் கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிகிழங்கு, பூங்கற்பூரம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கலந்த பரிமள சுகந்த திரவிய கலவையால் சுத்தம் செய்யப்பட்டது.

அதையடுத்து, சுவாமியின் மூலவா் சிலையை மறைத்திருந்த துணியை அா்ச்சகா்கள் அகற்றி, ஆகம முறைப்படி சிறப்பு பூஜை செய்து நெய்வேத்தியம் சமா்பித்தனா். பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தினா். பின்னா் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். இதை முன்னிட்டு ஏழுமலையான் தரிசனம் 5 மணிநேரம் ரத்து செய்யப்பட்டிருந்தது.

நறுமணப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட புனித நீர் கலவையைக் கோயில் வளாகம் முழுவதும் தெளிக்கப்படும். அதன்பிறகு மூலவருக்குப் பூஜைகள் முடிந்ததும் சுவாமி தரிசனத்திற்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...