நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 14: மேஷம் ராசி - சிவப்பு சந்தனம் மரம்

சந்தன மரங்களில் இரண்டு வகைகள் உள்ளன. 1. சிவப்புச் சந்தனம், 2. வெள்ளை சந்தனம். இவற்றில் சிவப்புச் சந்தன மரத்தை PTEROCARPUS SANTALINU.L என்று அழைப்பார்கள். இந்த மரம் மேஷம் ராசி கொண்டவர்களுக்கு மிகவும் ஏ
நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 14: மேஷம் ராசி - சிவப்பு சந்தனம் மரம்

சந்தன மரங்களில் இரண்டு வகைகள் உள்ளன. 1. சிவப்புச் சந்தனம், 2. வெள்ளை சந்தனம். இவற்றில் சிவப்புச் சந்தன மரத்தை PTEROCARPUS SANTALINU.L என்று அழைப்பார்கள். இந்த மரம் மேஷம் ராசி கொண்டவர்களுக்கு மிகவும் ஏற்றது.

Mars planet  எனப்படும் செவ்வாய்க் கிரகத்துடன் தொடர்பு கொண்டுள்ள இந்த ராசி மண்டலத்தின் நல்ல கதிர் வீச்சுக்களைத் தன்னுள் சேமித்துக் கொண்டு பல வகையில் நன்மையை அளிக்கிறது.

மிருகசீரிட நட்சத்திரம், சித்திரை நட்சத்திரம், அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை பிறந்தவர்களுக்கும், செவ்வாய்க் கிழமையன்று பிறந்தவர்களுக்கும் சிவப்புச் சந்தன மரம் பயனுள்ள மரமாகும். மேற்கண்ட ராசி நட்சத்திரம், தேதிகளில் பிறந்தவர்கள் சிவப்பு சந்தன மரத்தை அரசு அனுமதியுடன் வீட்டில் வளர்க்கலாம்.

தினசரி 30 நிமிடம் கட்டிப் பிடிக்கலாம். இதனால் இம்மரத்தின் நல்ல மருத்துவக் குணங்கள் அனைத்தும் மனித உடலுக்கு மாற்றலாகி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதால், பல நோய்களையும் குணமாக்குகிறது.

இந்திரனின் சொர்க்கத்தில் 5 மரங்கள் காணப்படுவதாகவும், அவற்றில் சந்தனமரமும் ஒன்று என்றும் இந்து சமுதாய மக்கள் நம்புகின்றனர். மேலும் யாகங்களிலும், பூஜைகளிலும் சந்தனத்தை முக்கிய பொருளாக பயன்படுத்துகின்றனர். நெற்றியிலும், உடலிலும் சந்தனத்தை அரைத்துப் பூசிக் கொள்வதால் செவ்வாய் கிரகத்தின் தோஷம் நீங்குவதுடன், இந்த கிரகத்தின் கதிர்வீச்சுகள் மனிதனையும் தாக்காது என யுனானி மருத்துவம் கூறுகின்றது.

மருத்துவ குணம் : சிவப்புச் சந்தன மரக்கட்டையை அரைத்துப் பவுடராக்கி வைத்துக் கொள்ளுங்கள். இதை 3 கிராம் முதல் 5 கிராம் வரை தேனில் கலந்து சாப்பிடலாம். இதனால் உஷ்ணம் தணிகிறது. வீக்கங்கள், தலைவலி போன்றவை குறைகிறது. மார்பு வலி, இதய பலவீனம், இதய படபடப்புக்கு நல்லது. அசுத்தமான இரத்தத்தையும், பித்தத்தையும் சுத்தம் செய்கிறது.

சிறுநீரகங்கள், கல்லீரல், குடல் சுருங்கிவிட்டால் அதன் திறன் குறைந்து விடுகிறது. இதற்குக் கிட்னி ஃபெயிலியர், லிவர் ஃபெயிலியர் என்பார்கள்.

இந்த நோய்களுக்கு வயிற்றில் உண்டாகும் வேக்காடு, உஷ்ணம், வறட்சிதான் காரணம் என்று மூலிகை மருத்துவம் கூறுகின்றது. வயிற்று உஷ்ணத்தைத் தணிக்க சிவப்பு சந்தன சர்பத் அல்லது லேகியம் தினசரி 1 வேளை பயன்படுத்தினால் நல்லது.

அதிகமான ரத்தப்போக்கை இது தடுக்கிறது. சிறுநீரைப் பெருமளவில் வெளியேற்றுகிறது. நரம்பு நோய்களைக் குணமாக்குகிறது. முகப்பருக்களை நீக்குகிறது. வெட்டை, மேகநோய், எய்ட்ஸ் நோயாளிக்கு மிகவும் நல்லது. இதை தினசரி பயன்படுத்தி வந்தால் மனதிற்கு மகிழ்ச்சியும், புத்திக் கூர்மையும் கிடைக்கும்.

இந்த ராசி கொண்டவர்களுக்கு நிலை மாறும் குணம் இருக்கும். நடப்பதெல்லாம் விதிப்படி நடந்தே தீரும் என்று நம்புவார்கள். மேலே கூறப்பட்ட கிரகம், நட்சத்திரங்களின் கெட்ட கதிர்வீச்சுகள் முக்கியமாகத் தலைப் பகுதியைத் தாக்கும். இவற்றின் தோஷத்தை நீக்க சிவப்புச் சந்தன மரம் பயன் அளிக்கிறது.

பயன்கள் :   சிவப்புச் சந்தனத்தில் பெர்மீத்தைல் ஈத்தர், சாண்டாலின் போன்ற நிறமிப் பொருட்கள் அடங்கியிருக்கின்றன. இதன் கட்டையில் டிரைடர்பினாய்டுகள் அதிக அளவில் அடங்கியுள்ளன. இவை அனைத்தும் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களாகும்.

உள்மூலம், வெளிமூலம், வெள்ளைப்படுதல், பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள், நாள்பட்ட காய்ச்சல், முகம் வீங்கி விடுதல், பேதி, சிறுநீர்ப்பைத் தொற்றுப் பாதிப்புகள் உள்ளிட்ட பல தீவிர நோய்களில் சிவப்புச் சந்தனக் கட்டை நல்ல மருந்தாக விளங்குகிறது. இதைக் காய வைத்துப் பவுடராக்கி மூன்று முதல் ஐந்து கிராம் வரையிலும் கஷாயமிட்டு 50 முதல் 100 மில்லி லிட்டர் வரையிலும் மருந்தாகப் பயன்படுத்தலாம்.

சிவப்புச் சந்தனக் கட்டையை எலுமிச்சம்பழச் சாற்றில் அரைத்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, புண், தோல் வெடிப்பு, மருக்கள், பருத்தொல்லை நலம் பெற்று அழகும், ஆரோக்கியமும் பெறும் என்று கூறப்படுகிறது.

சர்க்கரை நோயாளிகள் இம்மரத்தின் இலைகளை அரைத்து அதை நெல்லிக்காய் சாற்றில் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வரலாம் என்று பல்வேறு மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளன.

சிவப்பு சந்தன மரத்தை வாணியம்பாடியில் உள்ள டாக்டர் அக்பர் கவுஸரின் முகல் கார்டனில் உள்ள வானவியல் மூலிகைத் தோட்டத்தில் காணலாம்.



(தொடரும்)  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com