பேல்பூரி

நெட்ரவுசு: இந்த ரேட்ல ரோடு போட்டா.. * மைக்ரோ கதை ஓவியக் கண்காட்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த ஓவியங்கள் புரியவில்லை என்று நிறையப் பேர் சொன்னதால், ஓவியத்தின் கீழ் ஓவியத்திற்கான விளக்கம் எழுதி வைக்
பேல்பூரி
Published on
Updated on
2 min read

நெட்ரவுசு: இந்த ரேட்ல ரோடு போட்டா..

* மைக்ரோ கதை

ஓவியக் கண்காட்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த ஓவியங்கள் புரியவில்லை என்று நிறையப் பேர் சொன்னதால், ஓவியத்தின் கீழ் ஓவியத்திற்கான விளக்கம் எழுதி வைக்கப்பட்டிருந்தது.

அதற்குப் பின்பு வந்த ஒரு பார்வையாளர் ஓவியரைப் பார்த்து, ""ஒண்ணுமே புரியவில்லை '' என்றார் வருத்தத்துடன்.

""புரிந்து கொள்ள முடியாதவர்களுக்குத்தான் ஓவியத்தின் அடியில் விளக்கக் குறிப்புகள் எழுதி வைத்திருக்கிறேனே?'' என்றார் ஓவியர்.

""அதைத்தான் புரியவில்லை என்றேன்'' என்றார் பார்வையாளர்.

நெ.இராமன், சென்னை-74.

* ஸôரி...கொஞ்சம் ஓவர்

(தாம்பரம் பஸ் நிலையத்தில்)

மனைவி: என்னங்க நமக்குக் கல்யாணம் செஞ்சு வச்ச எங்க பெரியப்பா இறந்து போயிட்டாராம்.

கணவன்: செஞ்ச பாவம் சும்மா விடுமா?

வி.சி.கிருஷ்ணரத்னம்,

காட்டாங்குளத்தூர்.

* செல்மொழி

""நண்பனுக்கும் காதலிக்கும் என்ன மச்சி வித்தியாசம்?''

""ஃபிரண்ட்ஸிலேயே நீதான்டா பெஸ்ட் ஃபிரண்ட்னு நண்பன்ட்ட சொல்லலாம்.

காதலியிலேயே நீதான் பெஸ்ட் காதலின்னு சொல்ல முடியாது''

வி.கணேஷ், மதுரை-20

* படித்ததில் பிடித்தது

உடல் இளைக்க என்ன செய்வது? இதுதான் இன்று பலருடைய கவலை. பலர் தினமும் நடக்கிறார்கள், ஓடுகிறார்கள், நீச்சலுக்குப் போகிறார்கள். டென்னிஸ் போன்ற விளையாட்டுகள் விளையாடுகிறார்கள். இல்லையென்றால் "டயட்டிங்' என்ற பெயரில் பட்டினி கிடக்கிறார்கள்.

இன்னும் சிலர் சில ஸ்லிம்மிங் சென்டர்களுக்குப் போய் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழிக்கிறார்கள். விலை அதிகம் கொண்ட மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். கடைசியில் "பர்ஸ் இளைத்ததே தவிர உடம்பு இளைக்கவில்லையே' என்று ஆதங்கப்படுகிறார்கள். நீங்கள் என்னோடு வாருங்கள். உங்கள் வீட்டிலே கிச்சன் கிளினிக்கிற்கு! உடல் இளைக்க நான் சொல்கிறேன் மருந்து. தினமும் காலை சுமார் பதினோரு மணியளவில் மிளகு ரசம் ஒரு டம்ளர் பருகுங்கள். அது போதும். எத்தனை நாள் சாப்பிட வேண்டும் என்று கேட்காதீர்கள்! தினமும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். இந்த ரசத்துக்கு மணம், குணம் ஊட்ட கறிவேப்பிலை, கொத்துமல்லி, இஞ்சி இவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். இந்த மிளகு ரசத்தில் பருப்பைத் தவிர்ப்பது உசிதம். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதத்திற்கு இரண்டு, மூன்று கிலோ வரை உடல் குறையும்.

க.வெங்கடேசன், கே.வி.அபிராமி எழுதிய

"கிச்சன் கிளினிக்' என்ற நூலில் இருந்து.

* கண்டது

(வேலூர் ஊரிசு கல்லூரிக்கு எதிரே உள்ள

ஒரு மருத்துவமனையின் பெயர்)

மம்மி ஆஸ்பத்திரி

வெ.ராம்குமார்,

வேலப்பாடி.

பரிசு 100

*  சென்ட்ரல் ஸ்டேஷன் சாக்ரடீஸ்

உப்பைத் தின்றவன்

தண்ணீர் குடிப்பான்.

தண்ணீரைக் குடித்தவன்

உப்பைத் தின்பானா?

அ.மு.சுலைமான்,

காயல்பட்டணம்.

*  கேட்டது

ஒருவர்: என்னப்பா குலதெய்வத்துக்கு உன் பையன் ஒருத்தனுக்கு மட்டும்தானே மொட்டை அடிக்கப் போறதாச் சொன்னே? இப்போ நீ, உன் மனைவி, பையன் மூணு பேரும் மொட்டை போட்டுட்டு வந்திருக்கிறீங்களே?

இன்னொருவர்: அதுவா? ரெண்டு மொட்டை அடித்தால் ஒரு மொட்டை இலவசம்னான். அதான் மூணு பேரும் மொட்டை அடிச்சிக்கிட்டோம்.

இரா.சம்பத்குமார்,

மல்லசமுத்திரம்.

பரிசு 100

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.