பேல்பூரி: நெட் ரவுசு!

 *  கண்டது  (சக்தி தாலுகா கிராம போஸ்ட் ஆபிஸ் ஒன்றில் அறிவிப்பு...)    25 பைசா செல்லாது என அரசு அறிவித்துள்ளதால் பொது மக்கள் 25 பைசா மதிப்புள்ள மணியார்டர் ஃபாரத்தை இரண்டாக வாங்கிக் கொள்ளவும்.  ஏ.ஜே.ஜபீ
பேல்பூரி: நெட் ரவுசு!
Published on
Updated on
2 min read

 *  கண்டது

 (சக்தி தாலுகா கிராம போஸ்ட் ஆபிஸ் ஒன்றில் அறிவிப்பு...)

 25 பைசா செல்லாது என அரசு அறிவித்துள்ளதால் பொது மக்கள் 25 பைசா மதிப்புள்ள மணியார்டர் ஃபாரத்தை இரண்டாக வாங்கிக் கொள்ளவும்.

 ஏ.ஜே.ஜபீன்பேகம், சத்தியமங்கலம்.

 பரிசு ரூ.100

 *  கேட்டது

 (சிதம்பரம் பஸ் நிலையத்தில் இரண்டு கல்லூரி

 நண்பர்கள் பேசிக் கொண்டது...)

 ""மச்சான் கோபமா இருக்கிற குரங்கை பாலிதீன் கவர்ல அடைச்சு வச்சா எப்படியிருக்கும்...?''

 ""எப்படிடா இருக்கும்...?''

 ""ஐ.டி.கார்டுல உள்ள உன் போட்டோவைப் பாருடா...!''

 பூ.திலகவதி, சிதம்பரம்.

 பரிசு ரூ.100

 *  படித்ததில் பிடித்தது!

 எஃப் ஆபீஸýக்குப் போக வர, எல்ஐசி அலுவலகம் செல்ல... இப்படி இருவரும் சேர்ந்து வெளியே போய்வர எத்தனையோ சந்தர்ப்பங்கள்.

 அக்கம்பக்கத்தின் பார்வைகளில் குறும்பு தெரிந்தது. பெண்கள் அவளுடன் பழகாமல் ஒதுங்கிக் கொண்டனர். கணேசன் வரும் போதும், போகும் போதும் பக்கத்து வீட்டு ஆண்களின் கண்களில் பொறாமை தெரிந்தது. நினைக்கவே கூச்சமாக இருந்தது. கணேசனுடன் பழக்கம் கனவிலும் நினைக்காதது. முற்றிலும் நனையாததற்குள்ளேயே நிர்வாணப்படுத்திய சுற்றுப்புறம். மனம் முற்றிக்கொண்டு வந்தது. ஒருநாள் உடைந்து சிதறியது. சிதறலில் அவள் வெறும் பெண்ணாக, கணேசன் வெறும் ஆணாக சமூகத்தின் கட்டுத் தளைகளைக் கழற்றியெறிந்துவிட்டு...

 - ந.ஜீவாவின் "நிலா சாட்சி'

 குறுநாவலிலிருந்து...

 வெளியீடு: பாரதி புத்தகாலயம்.

 *  இது எங்க ஏரியா...உள்ளே வராதே!

 (தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோட்டை என முடியும் ஊர்களின் பெயர்கள்)

 பட்டுக்கோட்டை

 தம்பிக்கோட்டை

 மகிழங்கோட்டை

 சூரக்கோட்டை

 பரவாக்கோட்டை

 உள்ளிக்கோட்டை

 ஆத்திக்கோட்டை

 ககை.கந்தசாமி,

 மங்கலூர்.

 *  செல்மொழி

 நீ இருட்டில் இருக்கிறாயென்றால் வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்.

 வேண்டுதலுக்குப் பிறகும் இருட்டில் இருக்கிறாய் என்றால், தயவு செய்து உன் மின்சாரக் கட்டணத்தை உடனே செலுத்திவிடு.

 *  சென்ட்ரல் ஸ்டேஷன் சாக்ரடீஸ்

 இங்கிலீஷ் கோர்ஸில் இங்கிலீஷ் பற்றி படிக்கலாம்

 கம்ப்யூட்டர் கோர்ஸில் கம்ப்யூட்டர் பற்றி படிக்கலாம்

 சம்மர் கோர்ஸில் வெயில் பற்றி படிக்க முடியுமா?

 சத்யா பிரேமலதா, கழுகுமலை.

 *  ஸாரி... கொஞ்சம் ஓவர்!

 ஒருவர்: ஏன் சார்! பஸ்ஸில தூங்குறது குற்றமா?

 மற்றவர்: சே சே! யாரு சொன்னா? நான் கூட பஸ்ஸில அசந்து தூங்கியிருக்கேனே!

 ஒருவர்: அப்புறம் ஏன் சார் என்னை பஸ் டிரைவர் வேலையில இருந்து நீக்கிட்டாங்க?

 மற்றவர்: ????

 கல்யாணி பாலு,  திருநெல்வேலி.

 

 *  இம்போர்ட்டட் சரக்கு

 பிரிட்டனில் உள்ள பல் மருத்துவக் கிளினிக்குக்கு வந்த ஜோசப் அங்கிருந்த டாக்டரிடம் ""ஞானப்பல்லை எடுக்க வேண்டுமானால் எவ்வளவு செலவாகும்'' என்றான்.

 ""80 பவுண்டுகள்'' என்றார் டாக்டர்.

 அதனைக் கேட்ட ஜோசப் ""இது மிகவும் அதிகம்'. கட்டணத்தைக் குறைக்க ஏதாவது வழி உண்டா?'' என்றான்.

 ""மயக்க மருந்து பயன்படுத்தாமல் பல்லை நீக்கினால் 60 பவுண்டுகள் கட்டணம் செலுத்தினால் போதும்'' என்றார் டாக்டர்.

 இதுவும் அதிகமான கட்டணம் என்றும் அதனைக் குறைத்துக் கொள்ளும்படியும் கேட்டான் ஜோசப்.

 ""அப்படியென்றால் மயக்க மருந்து கொடுக்காமல், கட்டிங் பிளேயரைக் கொண்டு பிடுங்கி விடலாம். அதற்கு 20 பவுண்டுகள் கட்டணம்''என்றார் டாக்டர்.

 இதுவும் அதிகம் என்றான் ஜோசப். எரிச்சலடைந்த டாக்டர் ""மயக்க மருந்துகொடுக்காமல் கட்டிங் பிளேயரைக் கொண்டு என் மாணவன் ஒருவனைக் கொண்டு பல்லை நீக்கலாம். அதற்கு 10 பவுண்டுகள் கட்டணம்'' என்றார்.

 அதனைக் கேட்ட ஜோசப் ""ரொம்ப சந்தோஷம். அடுத்த செவ்வாய்க்கிழமை என் மனைவியை அழைத்து வருகிறேன்'' என்றான்.

 * மைக்ரோ கதை

 ஒரு வழிப்போக்கன் பக்கத்து ஊருக்கு, காட்டு வழியே நடந்துபோய்க் கொண்டிருந்தான். அடர்ந்த முட்கள் நிறைந்த அந்தக் காட்டின் நடுவில், பாழடைந்த கோவில் ஒன்று இருந்தது. அதைப் பார்த்த அவன், செருப்புகளை கழற்றி ஓரமாய் வைத்துவிட்டு, பய பக்தியுடன் சாமி கும்பிட்டான். பின்பு செருப்புகளை மாட்ட திரும்பியபோது, விஷ முள் அவன் காலில் குத்தியது. வலியால் துடித்த அவன், ரத்தம் சொட்ட, சொட்ட பக்கத்து ஊருக்கு வந்து சேர்ந்தான்.

 அங்கே இருந்த வைத்தியரிடம் சென்று காலைக் காட்டினான். வைத்தியர், அவன் காலில் மருந்து வைத்து கட்டுப்போட்டார். வைத்தியர் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்த வழிப்போக்கன், ""கடவுளே! உன்னை வணங்கத்தானே, செருப்பை கழற்றி வைத்தேன், எனக்கு இந்த தண்டனை தேவையா? '' எனச் சொல்லிக் கண்ணீர் விட்டான்.

 அப்போது அவன் கண் முன்பு தோன்றிய கடவுள் ""உன்னையும், உனக்கு பாதுகாப்பாய் செருப்பையும் படைத்தவன் நான். உன் பாதுகாப்புக்கு நான் தடையாய் இருப்பேனா? நீ செய்த தவறுக்கு நான் எப்படி பொறுப்பாவேன்?.'' எனச் சொல்லி மறைந்தார்.

 வழிப்போக்கனுக்கு தெளிவு ஏற்பட்டது.

 என்.மதியழகன், பெண்ணாடம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.