Enable Javscript for better performance
படிக்க அழைத்திருப்பது 12 வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு வார இதழ்கள் தினமணி கதிர்

    படிக்க அழைத்திருப்பது 12 வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள்!

    By   |   Published On : 06th April 2014 10:07 AM  |   Last Updated : 06th April 2014 10:07 AM  |  அ+அ அ-  |  

    6kdr10

    கடந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் வெற்றி. 93.2 சதவீதம் மதிப்பெண்கள். இருந்தும் கல்லூரியில் சேரவில்லை. அதற்காக வீட்டில் இருந்து கொண்டு ஊரைச் சுற்றவும் இல்லை அந்த மாணவர்.

    இரண்டு கண்டுபிடிப்புகள் அவருடைய சாதனை. ஒன்று: ஏடிஎம் இயந்திரத்தை யாராவது கொள்ளையடிக்க நினைத்தால் அதைப் பற்றிய தகவல் வங்கி மேலாளருக்கும், காவல்துறைக்கும் உடனே சென்றுவிடும்படியான கண்டுபிடிப்பு.

    இரண்டு : விளையாட்டு வீரர்கள் படு ஆர்வமாக விளையாடிக் கொண்டிருக்கும்போது தண்ணீர் தாகம் எடுத்தால் என்ன செய்வதென்று விழிக்காமல், உடனே தண்ணீர் குடிக்க முடியும். அதற்கு ஓர் ஏற்பாடு.

    ஒடிசாவைப் பூர்வீகமாகக் கொண்ட மாணவர் சுதன்ஸூ நாத் மிஸ்ராதான் இந்தக் கண்டுபிடிப்பாளர். டாக்டர் -இஞ்சினியர் பெற்றோர்.  பூர்வீகம் ஒடிசா என்றாலும்  படித்ததெல்லாம் பெங்களூருவில் உள்ள ஏஇசிஎஸ் மேக்னோலியா மாருதி பப்ளிக் ஸ்கூலில். நிறைய மதிப்பெண்கள் பெற்றும் இப்படி பொது நன்மைக்குப் பயன்படும் கண்டுபிடிப்புகளில் இறங்கிவிட்டார் சுதன்ஸூ.

    ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிப்பவர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். முதலில் மின்சாரத்தைத் துண்டித்து விடுகிறார்கள். கேமராவை முடக்கிவிடுகிறார்கள். இதையும் தாண்டி... ஏடிஎம் கொள்ளையைப் பற்றிய தகவல்களை உடனுக்குடனே காவல்துறையும், அருகிலுள்ள வங்கி மேலாளரும் பெற வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்தார் சுதன்ஸூ.

    பல வங்கிகளுக்குச் சென்று மேலாளர்களிடம் பேசினார். ஏடிஎம் எப்படி இயங்குகிறது என்பதைத் தெரிந்து கொண்டார். பல ஏடிஎம் இயந்திரங்கள் "நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா' என்ற நிறுவனம் நிர்வகிக்கும் தேசிய நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டிருப்பதைத் தெரிந்து கொண்டார்.

    ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்கப்படுகிறது என்ற  தகவலை அனுப்ப ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷனை அவர் பயன்படுத்தி ஸ்மார்ட் போனுடன் இணைக்கப்பட்ட ஒரு சிறு கருவியை உருவாக்கினார். இந்தக் கருவியில் மிகவும் நுண்ணிய சென்சார்கள் உள்ளன. இந்த சென்சார்கள் மிக நுண்ணிய அதிர்வுகள், ஒலிகள், வெப்பநிலை மாறுதல்கள் எல்லாவற்றையும் கண்டறியும் திறன் படைத்தவை. ஏடிஎம் இயந்திரங்களின் வழக்கமான செயல்களைத் தவிர வேறு ஏதேனும் சிறு மாற்றம் இருப்பினும், உடனே காவல்துறைக்கும், வங்கி மேலாளருக்கும் எஸ்எம்எஸ் பறந்துவிடும். அதுமட்டுமல்ல, ஏடிஎம் எந்த இடத்தில் உள்ளது என்ற தகவலையும்  வரைபடமாகவே அனுப்பி வைத்துவிடும்.

    ஏடிஎம் இயந்திரத்தில் சுதன்ஸூ கண்டுபிடித்த ஸ்மார்ட் போன் + கருவியை ஏடிஎம் கருவியில் பணம் வெளிவரும் இடத்துக்குப் பக்கத்திலோ, ஏடிஎம் இயந்திரத்தின் தலைப் பகுதியிலோ யாருடைய கண்ணிலும் படாத முறையில் பொருத்திவிடலாம்.

    சுதன்ஸூவின் இன்னொரு கண்டுபிடிப்பு விளையாட்டு வீரர்களின் தாகம் தீர்ப்பது. விளையாட்டு வீரர்கள் அணிந்திருக்கும் தலைக் கவசத்தில் குடிநீரை வைக்கும் ஏற்பாட்டைச் செய்திருக்கிறார் சுதன்ஸூ.

    இந்தக் கண்டுபிடிப்புகளில் மட்டுமே ஒரேயடியாக மூழ்கிவிடாமல், பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு மேற்படிப்புக்கான அப்ளிகேஷன்களையும் அனுப்பி வைத்திருந்தார்.

    "வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இவனாவது, படிப்பதாவது' என்று பலர் நினைத்திருந்த வேளையில், பலரும் ஆச்சரியப்படும்படியாக, இப்போது 12 வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் சுதன்ஸூவை படிக்க அழைத்திருக்கின்றன. அதுவும் சும்மா அழைக்கவில்லை. ஆண்டுக்கு ரூ.27 - 36 லட்சம் வரை ஸ்காலர்ஷிப் தருகிறோம் என்று சொல்லி அழைத்திருக்கின்றன.

    இவ்வாறு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் "வாராயோ மாணவா... வாராயோ' என்று அழைப்பதற்கு சுதன்ஸூ என்ன செய்தார்?

    கடந்த சிலமாதங்களாகவே அமெரிக்க பல்கலைக்கழகங்கள், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்திய நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்டார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் ஒரு மணிநேரத்தில் 20 மிக மிகக் கடுமையான,சிக்கலான கணக்குகளைப் போடச் சொன்னது. போட்டு அசத்திவிட்டார் சுதன்ஸூ.

    சுதன்ஸூவுக்கு அழைப்பு விடுத்துள்ள பல்கலைக்கழகங்களில் சில: கொலம்பியா பல்கலைக்கழகம், யுனிவர்சிட்டி ஆஃப் கேம்ப்ரிட்ஜ், யேல் பல்கலைக்கழகம், யுனிவர்சிட்டி ஆஃப் கலிஃபோர்னியா.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp