Enable Javscript for better performance
எனக்குப் பிடித்த புத்தகம்- Dinamani

சுடச்சுட

  

  எனக்குப் பிடித்த புத்தகம்

  Published on : 14th December 2014 11:58 AM  |   அ+அ அ-   |    |  

  14kdr9

  ELSON MANDELA - LONG WALK TO FREEDOM

  நெல்சன் மண்டேலாவின் சுய சரிதை படிக்கப் படிக்க விறுவிறுப்பினைத் தரும். இரு தொகுதிகள் கொண்டுள்ள அவருடைய சுயசரிதையில் முதல் தொகுதி 1918 முதல் 1962 வரையுள்ள காலத்தையும் (6 தலைப்புகள்), இரண்டாவது தொகுதி 1992 முதல் 1994 வரையுள்ள காலத்தையும் (5 தலைப்புகள்) சேர்ந்ததாகும். அவருடைய வாழ்க்கை வரலாறு தைரியம், தன்னம்பிக்கை, மன உறுதி, நாட்டுப்பற்று உள்ளிட்ட பல அரிய செய்திகளைக் கொண்டதாகும். விடுதலை பெற்ற நாளில் அவரது மன நிலையை அவர் தன் நூலில் பதிந்துள்ளதைக் காண்போம்:

  பிப்ரவரி 11, 1990 - காலை: விடுதலைக்கு முதல் நாள் சில மணி நேரமே தூங்கியபின்  அதிகாலை 4.30க்கு  எழுந்தேன். காலைக்கடன்களை முடித்தபின், உணவு உண்டேன். கேப் டவுனில் இருந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிகளைச் சார்ந்த பலருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் விடுதலையாவது பற்றியும்,  பேசவுள்ள பேச்சைக் குறித்தும் ஆவன செய்ய கேட்டுக் கொண்டேன்.

  முதல் சொற்பொழிவாற்ற விருப்பம் : சிறையில் இருந்தபோது பரிவு காட்டிய பார்ல் நகர மக்களிடையே முதலில் சொற்பொழிவாற்றவேண்டும் என நான் விரும்பினேன்.  பேரவா.  ஆனால் அது நல்ல யோசனையல்ல என்று கருதிய வரவேற்புக்குழுவோ கேப் டவுனில் உள்ள க்ராண்ட் பேரேட் என்னும் இடத்தை தீர்மானித்தது.

  முதல் நாள் இரவு  : மக்களிடம் நான் கொண்ட ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்தும் வகையில் விடுதலையான முதல் நாள் இரவை கேப் ப்ளாட்சில் கழிக்க விரும்பினேன். ஆனால்  பாதுகாப்பு காரணங்களுக்காக வெள்ளையர்கள் இருக்கும் பகுதியில் உள்ள ஆர்ச் பிஷப் டெஸ்மண்ட் டுடு வீட்டில் நான் தங்கவேண்டும் என்று என் நண்பர்களும்,  மனைவியும் விரும்பினர்.

  இறுதியாக சிறை உணவு : சிறை அதிகாரி ஸ்வார்ட் எனக்கு இறுதி உணவு வழங்க ஏற்பாடுகள் செய்தார். கடந்த இருஆண்டுகளாக உணவு அளித்தமைக்காக மட்டுமன்றி, நட்போடு இருந்தமைக்காகவும் அவருக்கு நன்றி கூறினேன்.

  அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு : சிறை அதிகாரி ஜேம்ஸ் கிரிகரியை அன்போடு கட்டியணைத்தேன்.  போல்ஸ்மோர் தொடங்கி விக்டர் வெர்ஸ்டெர் வரை பல இடங்களில் பல ஆண்டுகள் இருந்தபோதும் எப்போதும் சிறை அதிகாரிகளுடன் நான் அரசியல் பேசியதேயில்லை. இருப்பினும் எங்களுக்கிடையேயான பிணைப்பினை எடுத்துச் சொல்ல வார்த்தைகள் இல்லை. அவரை விட்டுச்செல்வது எனக்கு ஏக்கத்தைத் தந்தது. கடந்த இருபத்தேழரை ஆண்டுகள் சிறையில் வைத்திருந்தபோதிலும் ஸ்வார்ட், கிரிகரி, பிராண்ட் போன்ற சிறை அதிகாரிகள் மனித நேயத்தின் மீதான என்னுடைய நம்பிக்கையை மேம்படுத்தியவர்கள் ஆவர்.

  சிறையதிகாரிகளுக்குப் பிரியாவிடை : என்னையும் வின்னியையும் காரில் சிறையின் முகப்பு வாயில் வரை அழைத்துச் செல்வதாகத் திட்டமிடப்பட்டது. இவ்வளவு நாளும் என்னை பார்த்துக்கொண்ட சிறையதிகாரிகளுக்கும் காவலர்களுக்கும் பிரியாவிடை தர விரும்பி அதிகாரிகளிடம் கூறினேன்.  முகப்பு வாயிலில் அவர்களும் அவர்களுடைய குடும்பங்களும் எனக்காகக் காத்திருப்பர். எனவே அவர்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றிகூற விரும்புகிறேன். 

  விடுதலையை நோக்கி வருதல் : 3.00 மணிக்குப் பின் சில நிமிடங்கள் கழித்து நஅஆஇ நிகழ்ச்சிப்பொறுப்பாளர்   என்னிடம் காரை விட்டு இறங்கி வாயிலுக்கு முன்பாக சிறிதுதூரம் வரவேண்டும் என்றும் அப்போதுதான் நான் விடுதலையை நோக்கி நடப்பதை அவர்கள் படமாக்க முடியும் என்றும் கேட்டுக் கொண்டார். 

  பரபரப்பான காத்திருப்பு : மதியம் 3.30 மணிக்கு என்னிடம் பரபரப்பு காணப்பட்டது. நேரம் ஓடிக்கொண்டேயிருந்தது. வரவேற்புக்

  குழுவினரிடம் என் மக்கள் எனக்காக 27 ஆண்டுகள் காத்திருந்தனர். இனியும் அவர்களைக் காக்க வைக்கக்கூடாது என்று நான் கூறினேன். 4.00 மணிக்குச் சற்று முன்பாக அங்கிருந்து மோட்டார் காரில் குழுவாக அனைவரும் கிளம்பி வெளியே வர ஆரம்பித்தோம்.

  உற்சாக வரவேற்பு  : 20 அடிக்குள்ளாகவே கேமராக்கள் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்துவிட்டன. எங்கும் சத்தம். பத்திரிகையாளர்கள் உரக்கக் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். அதிக எண்ணிக்கையில் தொலைக்காட்சி நிருபர்கள் என்னை நெருங்க ஆரம்பித்தனர்.  ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் உற்சாக வாழ்த்தொலி எழுப்பினர். சொல்லப்போனால் அது ஒரு மகிழ்ச்சியான ஆரவாரம். ஒரு தொலைக்காட்சி நிருபர் ஏதோ ஒரு பொருளை என்னை நோக்கி எடுத்துக் கொண்டுவந்தார். நான் சிறையில் இருக்கும்போது புதிதாக உருவாக்கப்பட்ட  ஓர் ஆயுதமோ என நான் வியந்துபோவதற்குள் வின்னி என்னிடம்,  அது ஒரு மைக்ரோபோன் என்று கூறினார்.

  புதிய வாழ்க்கை ஆரம்பம் : மற்றொரு புறத்தில் உள்ள கதவுகள் வழியாக காரில் போவதற்காக,  நான் கடைசியாக நடந்தபொழுது  71 வயதிலும்கூட எனக்கு வாழ்க்கை புதிதாக ஆரம்பமாவதுபோலத் தெரிவதாக உணர்ந்தேன். அத்துடன் என்னுடைய 10,000 நாள் சிறை வாழ்க்கை முடிந்தது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai