பெண்களைச் சீண்டினால் எஸ்எம்எஸ் அனுப்பும் கருவி !

பெண்களைச் சீண்டினால் எஸ்எம்எஸ் அனுப்பும் கருவி !

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் சா.சிவசூரியா, "அக்ரி பாடி லெவலர்' என்ற விவசாயத்திற்கு பயன்படும் கருவியைக் கண்டுபிடித்து "இந்திய

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் சா.சிவசூரியா, "அக்ரி பாடி லெவலர்' என்ற விவசாயத்திற்கு பயன்படும் கருவியைக் கண்டுபிடித்து "இந்திய இளம் விஞ்ஞானி 2016' என்ற விருதினைப் பெற்றுள்ளார்.
 சிவசூரியா ஏழாம் வகுப்பு படிக்கும்போதே பல அறிவியல் படைப்புக்களைப் படைத்து வெற்றி பெற்றவர்.
 31.7.2013 ஆம் தேதி தனியார் தொலைகாட்சி நடத்திய மாவட்ட அளவிலான வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி திட்டத்தின்கீழ் நடைபெற்ற அறிவியல் போட்டியில் தொழிற்சாலைகளில் புகைபோக்கியிலிருந்து வெளியேறும் புகையில் கார்பன்டை ஆக்ûஸடு உள்ளிட்டவற்றை நல்ல காற்றாக மாற்றும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து முதலிடம் பெற்றார்.
 இவருக்கு இந்திய விமானப்படையின் முன்னாள் விங் கமாண்டர் மற்றும் விண்வெளி வீரருமான ராகேஷ் ஷர்மா, ரஷ்ய உதவி தூதரக அதிகாரி டெமிக்ரிலோமாகில், விண்வெளி கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஸ்ரீமதிகேஷன், அப்துல்காலம் சர்வதேச அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் ஏ.பி.ஜே.எம்.ஜே.ஷேக்தாவூத் ஆகியோர் கலந்து கொண்டு "இந்திய இளம் விஞ்ஞானி 2016' விருதினை வழங்கினார்கள்.
 இதுதவிர, எரிமலை வெடிப்பதை 24 மணிநேரத்திற்கு முன்னர் கண்டுபிடிக்கும் கருவி, விவசாய நிலங்களை அழிக்க வரும் யானைகள் 100 மீட்டர் தூரத்தில் வரும்போதே கண்டறியும் கருவி, கழிவுப் பொருள்களில் இருந்து மின்சாரம் தயாரிப்பது, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும்போது, அவர்கள் செல்ல வேண்டிய பேருந்து குறித்து அறியும் கருவி, பெண்களை யாரும் சீண்டினால் (இவர் கண்டுபிடித்த கருவியை அப்பெண்கள் வைத்திருந்தால்) உடனடியாக பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் கருவி, பெரிய ஆலைகளில் மின்விசிறி சுற்றும் போது அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவி என பல கண்டுபிடிப்புக்களைக் கண்டுபிடித்து பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.
 தனது கண்டுபிடிப்புகள் குறித்து மாணவர் சிவ சூரியா நம்மிடம் கூறியதிலிருந்து...
 
 ஏழாம் வகுப்பு படிக்கும் போது புதிய கருவிகளைக் கண்டுபிடிக்கும் ஆர்வம் பிறந்தது.
 சென்னையில் உள்ள விண்வெளி கிட்ஸ் இந்தியா, அப்துல்கலாம் பவுன்டேசன் இன்டர்நேஷனல் நிறுவனங்கள்,சர்வதேச ரஷ்ய விண்வெளி ஆராய்சி அறிவியல் மற்றும் கலாச்சாரக் கழகம் மற்றும் மாஸ்கோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து சென்னையில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் இந்திய அளவிலான அறிவியல் படைப்புகள் சம்பந்தமான போட்டியை நடத்தியது.
 இப்போட்டிக்கு இ-மெயில் மூலம் 1500 பேர் அனுப்பி வைத்தனர். இதில் முதல் கட்டமாக 526 பேர்வு தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ச்சியாக 85 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் படைப்புகள் சென்னையில் உள்ள இந்திய மற்றும் ரஷிய கலாசார மையத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்த படைப்புகள் வல்லுநர்கள் கொண்ட நிபுணர் குழுவால் அவை செயல்படும்விதம், மக்களுக்கு அதனால் ஏற்படும் பயன்கள் என பல கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டன.
 என்னுடைய படைப்பான "அக்ரி பாடி லெவலர் கருவி'க்கு முதல் பரிசு கிடைத்தது.
 இந்த கருவி விவசாயத்திற்குப் பயன்படக்கூடியது.
 ரிமோட் மூலம் இதனை இயக்கி நிலத்தைச் சமப்படுத்துவது, வரப்பு அமைப்பது, பாத்தி கட்டுவது ஆகிய வேலைகளைச் செய்யலாம்.
 பெட்ரோல் மற்றும் டீசல் இல்லாமல் சூரிய ஒளி சக்தி மற்றும் மின்சேமிப்பு பேட்டரியால் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரிமோட் கண்ட்ரோலில், டிரான்ஸ்மீட்டர் மாடியூல் பொருத்தப்பட்டிருக்கும். இதன் மூலம் சிக்னல், கருவிக்கு செல்லும்.
 கருவியில் 12 வோட் மின்சாரம் மூலம் இயங்கும் யூனிட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு மின்சாரம் பெற சூரியத் தகடு பொருத்தப்பட்டுள்ளது.
 இதனை மினி டிராக்டர் எனக் கூறலாம். இதில் உள்ள போர்டில் டிரான்ஸ்மீட்டர், ரிசீவர், மைக்ரோ கண்ட்ரோல் யூனிட், டிரைவர் யூனிட் ஆகியவை பொருத்தப்பட்டிருக்கும்.ரிமோட் மூலம் இயக்கும் போது, அதில் பின்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள இரும்புத் தகடுமூலம் பாத்தி அமைப்பது. நிலத்தைச் சமன்படுத்துவது, வரப்பு அமைப்பது ஆகிய வேலைகளை எளிதில் செய்யலாம். இதில் முன்பக்கம் 2 சிறிய டயர்களும், பின்பகுதியில் 2 பெரிய டயர்களும் இருக்கும். நமக்குத் தேவையான திசையில் இயக்கலாம். பெண்களும் இதனை இயக்கலாம்.
 கிராமப்புற விவசாயிகள் மாடு வைத்து லெவலிங் செய்யும் முறைக்கு மாற்றாக இது அமையும்.
 பூமி மாசுபடுவதைத் தடுக்கும் இயந்திரமாக இதனை உருவாக்கியிருக்கிறேன். எனது கண்டுபிடிப்புகளுக்கு வழிகாட்டியாக கல்லூரி பேராசிரியர் சீனிவாசன் உள்ளார்'' என்றார் மாணவர் சிவசூரியா.
 -எஸ்.பாலசுந்தரராஜ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com