பெண்கள் ஓட்டு!

மிசோராமில் நவம்பர் 28-ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. மிசோ நேஷனல் ப்ரன்ட் (mnf) மற்றும் காங்கிரஸ் தான் முக்கிய கட்சிகள்.
பெண்கள் ஓட்டு!

மிசோராமில் நவம்பர் 28-ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. மிசோ நேஷனல் ப்ரன்ட் (mnf) மற்றும் காங்கிரஸ் தான் முக்கிய கட்சிகள்.
 மிசோராமில் இன்று 1000 ஆண்களுக்கு 1175 பெண்கள் உள்ளனர். இருந்தாலும் பெண்களுக்கு அரசியலில் உரிய இடம் கிடைக்கவில்லை. அரசியல் கட்சிகளும் பெரிய அளவில் சீட்டு தருவதும் இல்லை.
 1978-ஆம் ஆண்டிலிருந்து சமீபகாலம் வரை மொத்தமே 4 பெண்கள்தான் சட்டசபைக்கு தேர்வு பெற்றனர். இதில் இருவர் மந்திரி பதவி பெற்றுள்ளனர்.
 மிசோ நேஷனல் ப்ரன்ட், 2003-இல் கடைசியாக ஒரு பெண்ணுக்கு போட்டியிட சீட்டு கொடுத்தது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் ஒரு சீட்டு தந்தது. அவர் தோற்றுப் போனார். இடைத் தேர்தலில், மீண்டும் வான்லாலா விம்பிலி சாவங்க்து என்ற பெண் போட்டியிட்டு, ஜெயித்து, மினிஸ்ட்ரி ஸ்டேட்(உப அமைச்சராக) பதவி வகித்து வருகிறார்.
 இதற்கு முன் மிசோ நேஷனல் ப்ரன்ட் சார்பாக போட்டியிட்ட பலிதிம் புலி ஹிமார் ஜெயித்து, முதல் பெண் அமைச்சர் என்ற கௌரவத்தை பெற்றார். ஆனால், 2003 தேர்தலில் தோற்றுப் போனார்.
 2018-இல் நடக்கவுள்ள தேர்தலில் இரு கட்சிகளிலுமே பெண்களுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை.
 - வர்ஷினி, பெங்களூரு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com