சிரி... சிரி...

"அப்பா மேல உள்ள மரியாதைக்கும், உங்க பையனிடம் நீங்க "போங்க... வாங்க' ன்னு மரியாதையாப் பேசுறதுக்கும் என்ன சார் சம்பந்தம்?''
சிரி... சிரி...

* "எனக்கும் என் தலைவருக்கும் "தோற்ற' 
ஒற்றுமை உண்டு''
"பார்த்தால் அப்படித் தெரியலையே?''
"அந்தத் தோற்றமில்லை. தேர்தலில் நானும் அவரும் நிறைய தோற்றுப் போன ஒற்றுமையைச் சொன்னேன்''
டி.கே.சுகுமார், குனியமுத்தூர்.

* கணவன்: உன் சொந்த பந்தமெல்லாம் 
அறிவிப்பு இல்லாத கரண்ட் கட் மாதிரி
மனைவி: புரியலையே...
கணவன்: எப்ப வருவாங்க... எப்ப போவாங்கன்னு தெரிய மாட்டேங்குதே!
செ.ரா.ரவி, செம்பட்டி.

* "தலைவர் ரொம்ப சந்தோஷமாயிருக்காரே... ஏன்?''
"அவர் சிலையை யாரோ திருடி வெளிநாட்டுக்கு அனுப்பியிருக்காங்க. அதை அங்கே மியூசியத்துல வச்சிட்டாங்களாம்''
எஸ்.மோகன், கோவில்பட்டி.

* "அப்பா மேல உள்ள மரியாதைக்கும், உங்க பையனிடம் நீங்க "போங்க... வாங்க' ன்னு மரியாதையாப் பேசுறதுக்கும் என்ன சார் சம்பந்தம்?''
"என்னுடைய பையனுக்கு என் அப்பா 
பெயரைத்தானே வச்சிருக்கேன்''
வி.ரேவதி, தஞ்சாவூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com