Enable Javscript for better performance
சிரி... சிரி...- Dinamani

சுடச்சுட

    
    joke

    • "ஊசி போடுற மாடல் ஜாக்கெட் தைக்கணுமா? புரியலையே...''
    "ஜாக்கெட் கையிலே
    பெரிய ஓட்டை வச்சுத் 
    தைச்சுக் கொடுங்க''
    விஜயா சுவாமிநாதன், 
    திருச்சி.

    • "அவர் மாதத்துக்கு 
    எப்படியும் பத்து பதினைந்து படத்துக்குப் பூஜை 
    போட்டுடுவாரு''
    "அவ்வளவு பெரிய 
    டைரக்டரா?''
    "இல்லை... 
    நல்ல சாஸ்திரிகள்''
    ஏ.எஸ்.இராஜேந்திரன், வெள்ளூர்.

    • "பொண்ணுக்கு ஆடத் தெரியுமா? பாடத் தெரியுமா?''
    "அதுக்கு முன்னாடி உங்க பையனுக்குச் 
    சமைக்கத் தெரியுமான்னு சொல்லுங்க''
    சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

    • "ஒரே தொடர் கனவா வருது''
    "எப்படி தொடர் கனவுன்னு சொல்றே?''
    "எபிசோட் நம்பர் போட்டு வருதே''
    ஏ.நாகராஜன், பம்மல்.

    • "ஏங்க... பக்கத்து
    வீட்டுக்காரரு
    வாக்கிங் போக 
    கூப்புடுறாரு''
    "முடியாது. வாக்கிங் 
    போகும்போது சமையல் 
    எப்படிச் செய்றதுன்னு உயிரை வாங்குவாரு''
    ம.வேதவள்ளி, 
    பொரவச்சேரி.

    • "அறைகூவலை ஏன் பாதியிலேயே நிறுத்திட்டார்?''
    " "அரை' கூவலாம்''
    என்.பர்வதவர்த்தினி, சென்னை-75.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai